ஹரியாணாவின் ஹிசார் நகரில் நேற்று நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது மாநில பாஜக தலைவர்கள், அவருக்கு நினைவுப் பரிசினை வழங்கினர்.படம்: பிடிஐ 
இந்தியா

பாகிஸ்தான் மொழியில் பேசுகிறது காங்கிரஸ்: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஹிசார்

பாகிஸ்தான் மொழியில் காங் கிரஸ் பேசுகிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் பாஜக சார்பில் ஹிசார், கோகன்னா பகுதிகளில் நேற்று பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ் மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப் பட்டது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வலியை ஏற்படுத்தியது. தூய்மை இந்தியா திட்டம், துல்லியத் தாக்குதல், பாலகோட் தீவிரவாத முகாம்கள் அழிப்பு நட வடிக்கைகளின்போதும் காங்கிர ஸுக்கு வலி ஏற்பட்டது. அந்த வலியை குணப்படுத்த மருந்தே கிடையாது.

ஜனநாயக நாட்டில் மக்களே உயர்வானவர்கள். அந்த வகையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப் பளித்து மத்திய அரசு செயல்படு கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தான் மொழியில் பேசுகிறது.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கூறும் கருத்துகளையே சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் எடுத்துரைக்கிறது. பாகிஸ்தானுக் கும் காங்கிரஸுக்கும் நூறு சதவீதம் கெமிஸ்ட்ரி ஒத்துப் போகிறது.

நாட்டில் தண்ணீர் பற்றாக் குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் நமது தாய்மார்கள், சகோதரிகள் குடிநீருக்காக அலைய வேண்டிய தேவை இருக்காது. விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக் குறை பிரச்சினை வராது.

வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை சுத்திகரித்து பாசன தேவைக்கு பயன்படுத்த திட்டமிட் டுள்ளோம். இந்த திட்டம் வரும் 2024-ம் ஆண்டுக்குள் வெற்றி பெறும். ஹரியாணாவின் வளர்ச்சிக் காக பாஜக அரசு பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி தனது சுயநலத்துக்காக மட்டுமே செயல் படுகின்றது.

காங்கிரஸின் ஹரியாணா மாநில தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் 10 முதல் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதுமானது என்று அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தல் தோல்வியை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT