இந்தியா

சோனியா காந்திக்கு பதில் ராகுல்:  ஹரியாணா காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம் திடீர் மாற்றம் 

செய்திப்பிரிவு

சண்டிகர்

ஹரியாணாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென அவருக்கு பதிலாக முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அந்த கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமை யிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 90 தொகுதி களைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில், பாஜகவை ஆட் சியை விட்டு அகற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேசமயத்தில், ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவும் இரவு - பகலாக களப் பணியாற்றி வருகிறது.

இவை தவிர, இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ், ஜனநாயக ஜனதா ஆகிய கட்சிகளும் தனித்தனியே போட்டியிடு வதால் ஹரியாணாவில் பல முனைப் போட்டி நிலவுகிறது.

ஹரியாணாவில் உள்ள மகேந்திரகரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால் திடீரென அவருக்கு பதிலாக முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அந்த கூட்டத்தில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹரியாணா மாநில காங்கிரஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
‘‘மகேந்திரகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார். சோனியா காந்தி அந்த கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சோனியா காந்தி பங்கேற்காதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT