கோப்புப் படம் 
இந்தியா

ஆந்திராவில் வேன் கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

அமராவதி

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கம் மாவட்டத்தில் உள்ள செலகேரி கிராமத்தைச் சேர்ந்த 12 பேர், ஒரு வேனில் ஆந்திராவிற்கு சுற்றுலா சென்றனர்.

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பத்ராசலத்தில் உள்ள கோதண்டராமரை தரிசித்துவிட்டு ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அன்னவரம் சென்று கொண்டிருந்தனர்.

மாரேடுமில்லி - சிந்தூரு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர் பாராதவிதமாக 30 அடி பள்ளத் தில் அந்த வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந் தனர். படுகாயமடைந்த மற்ற 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT