இந்தியா

நாட்டுக்காக உழைத்தவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் அரசியலில் தீண்டாமை என்பது கூடாது: பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

பிடிஐ

‘‘நாட்டுக்காக பாடுபட்டவர்கள், உயிர்த் தியாகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும். அரசியலில் தீண்டாமை என்பது கூடாது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார்.

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் நிதி அமைச்சர் கிரிதாரிலால் டோக்ரா வின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா, ஜம்முவில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இவ்விழாவில், காஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் கரண்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர.

கிரிதாரிலால் நூற்றாண்டு விழாவில் நேற்று பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த நாட்டுக்காக பாடுபட்டவர் கள், உயிர்த் தியாகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவ ராக இருந்தாலும், அவருடைய கொள்கை எதுவாக இருந்தாலும், அவர்களை சமமாக கருத வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும். நாட்டுக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள் விஷயத்தில் அரசியல் தீண்டாமை கூடாது. இந்திய நாட்டின் பாரம் பரியம் பிளவுபட கூடாது. நாட்டுக் காக உழைத்து உயிர்நீத்த அனை வரையும் சமமாக கருதி மரியாதை செலுத்த வேண்டும்.

காஷ்மீர் அரசியல் வரலாற்றில், கிரிதாரிலால் டோக்ரா மிக உயர்ந்த தலைவராக விளங்கினார். காஷ்மீர் மாநிலத்தில் 26 பட்ஜெட்டுகளை அவர் தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், அந்த பட்ஜெட்டுகளில் தங்கள் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் எதையும் அவர் செய்ய வில்லை. ஏன், அவருடைய மருமகன் அருண் ஜேட்லிக்கு சாதக மாக கூட (கிரிதாரிலால் டோக்ரா வின் மகளைத்தான் ஜேட்லி திருமணம் செய்துள்ளார்) அவர் எதுவும் செய்யவில்லை.

தனது குடும்பத்தினர் பலன் பெறும் வகையில் தனது பதவியை, அதிகாரத்தை கிரிதாரிலால் எதை யும் செய்தது கிடையாது.டோக்ராவை போலவே ஜேட்லியும் பொது வாழ்க்கையில் சரியான பாதையில் சென்று கொண்டிருக் கிறார்.

ஆனால், சில மருமகன் களால் என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன என்பது நமக்குத் தெரி யும். (காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிலம் வாங்கிய விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதை மறை முகமாக குறிப்பிட்டார்.)

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மோடி மேலும் கூறும்போது, ‘‘நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டோக்ரா பற்றிய புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள எந்த படத்திலும் டோக்ராவுடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லை. அவர் இறந்த போது இறுதி சடங்கு நடந்த புகைப்படத்தில் மட்டும்தான் அவரது குடும்பத்தினரை காண முடிகிறது. இதுபோல் பொது வாழ்க்கையில் இருப்பது மிகவும் கடினம். அதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT