புதுடெல்லி
சிறுபான்மை மக்களுக்கு இந்தியா சொர்க்கபுரியாக உள்ளது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய சிறுபான்மை மேம்பாடு மற்றும் நிதி கழகத்தின் வெள்ளி விழா கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
உலக அளவில் இந்தியாவை மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக பிரதமர் மோடி உருவாக்கிக் கொண்டு இருக்கிறார். இந்தியா சிறுபான்மை மக்களின் சொர்க்கபுரியாக உள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் சிறுபான்மை மக்களுக்கு நரகமாக உள்ளது.
தரமான கல்வி, வேலைவாய்ப்பு, திறன்மேம்பாடு, உள்கட்டமைப்பு போன்ற சமூகத்திற்கு அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுக்க மத்திய அரசு முயன்று வருகிறது.
குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு போன்றவற்றை வழங்க பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.