இந்தியா

இன்ஸ்டாகிராமில் மோடி சாதனை: 30 மில்லியன் பேர் பின்தொடரும் உலகின் ஒரே தலைவர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி, ஐ.ஏ.என்.எஸ்

இன்ஸ்டாகிராமில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைவிட உலகில் அதிகம் பேர் பின்தொடரும் ஒரே தலைவராக பிரதமர் மோடி சாதனை புரிந்துள்ளார்.

பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்ந்து வருபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ட்விட்டரில் அதிகம் பின்தொடர்ந்த தலைவர்களில் ஒருவரான பிறகு, இப்போது மோடியின் புகழ் இன்ஸ்டாகிராமிலும் அதிகரித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில், அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை விட முன்னணியில் உள்ளார். 30 மில்லியன் பேர் பின் தொடரும் வகையில் புதிய மைல்கல்லை எட்டிய ஒரே உலகத் தலைவரும் மோடி தான்.

செப்டம்பரில், மோடியின் ட்விட்டர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 மில்லியனைத் தாண்டியது.

குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே மைக்ரோ பிளாக்கிங் தளத்தின் நிலையான பயனராக இருந்த மோடி. இன்ஸ்டாகிராமிலும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்வதில் அவர் தாமதமாக ஆர்வம் காட்டியுள்ளார். எனினும் லட்சக்கணக்கான பயனர்கள் அவரைப் பின்தொடர்ந்ததால் சாதனையாளர்கள் பலரையும் கடந்து அவர் முதலிடத்தில் வந்துள்ளார்.

பல உலகநாடுகளுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்ட போதிலும் ஆகஸ்டில் அரபு நாடுகளிலும், அமெரிக்காவின் ஹூஸ்டனிலும் மிகப்பெரிய வரவேற்பு மோடிக்கு கிடைத்தது. சமீபத்தில் மாமல்லபுரத்திற்கு வருகை சீன அதிபருடன் மோடி நட்பு பாராடியவிதமும் அவரை வரவேற்று உபசரித்த விதம் உலகின் கண்களை திரும்பிப் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT