கோவா மாநிலத்தில் குடிநீர் விநியோ கம், வடிகால் திட்ட ஒப்பந்தத்தை பெற அமெரிக்க நிறுவனம் ஒன்று லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் இரண்டு முன்னாள் அமைச்சர் களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
கோவாவிலும் குவாஹாட்டி நகரிலும் குடிநீர் விநியோகம், வடிகால் திட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்தியாவைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரி களுக்கு ரூ.6 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நிறுவனமான லூயிஸ் பெர்ஜர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியாவைச் சேர்ந்த அமைச்சர்கள் யார் என்ற விவரத்தை அமெரிக்க நிறுவனம் வெளியிடவில்லை. இந்த விவ காரம் குறித்து கோவா முன்னாள் முதல்வரும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் கூறியதாவது:
கோவா மாநில குடிநீர் விநியோகத் திட்டம் ஜப்பான் சர்வதேச நிதி திட்டத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால் அப் போதைய பொதுப்பணித்துறை அமைச்சருக்கு இதில் தொடர்பு இருக்கும் என சந்தேகம் எழுகிறது. அவர் தவிர மேலும் ஓர் அமைச்சரும் இதில் கைகோத்து செயல்பட்டிருக்கலாம்.
திகம்பர் காமத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது இந்த ஊழல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் எல்லா உண்மைகளும் வெளியாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எனினும் ஊழலில் தொடர் புடைய அமைச்சர்கள் யார் என்ற விவரத்தை அவர் வெளிப்படை யாகத் தெரிவிக்கவில்லை.
கோவா முதல்வர் பேட்டி
கோவா முதல்வர் பர்சேகர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
லஞ்ச புகார் விவகாரம் சர்வதேச பிரச்சினை என்பதால் கோவா போலீஸ் விசாரிக்க முடியாது. எனவே உண்மையை வெளிப்படுத்த சிபிஐ விசாரணை நடத்தக் கோரி பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுத மாநில அரசு முடிவு செய்துள்ளது.
குடிநீர் திட்ட ஒப்பந்தம் வழங் கப்பட்டபோது முதல்வராக இருந்த வர் காங்கிரஸ் மூத்த தலைவர் திகம்பர் காமத். பொதுப்பணித் துறை அமைச்சராக சர்ச்சில் அலெமாவ் இருந்தார். எந்த அமைச்சர் லஞ்சம் வாங்கினார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.