மும்பை
மும்பை பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட முதல் திருநங்கை பட்டதாரி என்ற பெருமையை சந்தோஷ் லோண்டே (36) என்பவர் பெற்றுள்ளார்.
ஸ்ரீதேவி என பெயர் சூட்டிக் கொண்ட இவர், மும்பை பல் கலைக்கழகத்தின் தொலைதூர மற்றும் திறந்தவெளி கல்வி மையத்தில் பட்டப்படிப்புக்கு 4 ஆண்டுகளுக்கு முன் விண் ணப்பித்தார்.
திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக குறிப்பிட வேண்டும் என்ற யுஜிசி உத்தரவை ஏற்று, மும்பை பல்கலைக்கழகம் அப் போது மாணவர்கள் சேர்க்கையில் அதனை அறிமுகம் செய்தது. ஸ்ரீதேவியை மூன்றாவது பாலின மாக பதிவு செய்தது. இந்நிலையில் ஸ்ரீதேவி கடந்த மாதம் உளவியல், சமூகவியல் ஆகிய 2 பாடங்களில் இளநிலை பட்டம் பெற்றார். மும்பை பல்கலை.யில் இதற்கு முன் திருநங்கைகள் பட்டம் பெற்றிருந்தாலும் அங்கீ கரிக்கப்பட்ட முதல் திருநங்கை பட்டதாரி என்ற பெருமையை ஸ்ரீதேவி பெற்றுள்ளார்.
தற்போது இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுகலை பட்டப் படிப்புக்கு ஸ்ரீதேவி பதிவு செய் துள்ளார். வடக்கு மும்பை, மாலட் புறநகர் பகுதியில் அழகு நிலையம் நடத்தி வரும் ஸ்ரீதேவி, மாலையில் அங்குள்ள தொண்டு நிறுவனப் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறார்.