மும்பை
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. கல்யாண் கிழக்கு தொகுதியில் சிவசேனா போட்டியிடவில்லை. பாஜகவுக்கு அந்தத் தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளது.
இந்தத் தொகுதியில் சிவசேனா கட்சியின் தனஞ்செய் போடர் என்பவர் வேட்பாளராக அறிவிக் கப்படுவார் என்று கட்சியினர் எதிர் பார்த்தனர். ஆனால், அத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் சிவசேனா கட்சியினரும் தனஞ் செய் ஆதரவாளர்களும் அதிருப்தி யில் உள்ளனர்.
ஏமாற்றம் அடைந்துள்ள சிவசேனா கட்சியைச் சேர்ந்த 26 கவுன்சிலர்கள் தங்கள் எதிர்ப் பைத் தெரிவிக்கும் வகையில் கட்சியில் இருந்து ராஜினாமா செய் துள்ளனர். இதில் 16 பேர் கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியையும் 10 பேர் உல்லாஷ் நகர் நகராட்சி யையும் சேர்ந்தவர்கள். கட்சித் தொண்டர்கள் 300 பேரும் ராஜி னாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்கள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு அனுப்பப்பட் டுள்ளதாக கவுன்சிலர்களில் ஒரு வரான சரத் பாட்டீல் தெரிவித்தார்.