இந்தியா

ஹாங்காங்கை நாங்கள் கண்காணிக்கிறோம் என்று பிரதமர் ஏன் கூறவில்லை: காங்கிரஸ் கேள்வி

செய்திப்பிரிவு

புதுடெல்லி, பிடிஐ

காஷ்மீர் விவகாரங்களை நாங்கள் கவனித்து வருகிறோம் என்று சீனா கூறும்போது ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை நாங்களும் கவனித்து வருகிறோம் என்று பிரதமர் மோடி ஏன் கூறவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுவதை மோடி அரசு நிறுத்துவதில் தோல்வி அடைந்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கூறியுள்ளார்.

“சீன அதிபர் ஜின்பிங் காஷ்மீரை கவனித்து வருவதாகக் கூறி வருகிறார், ஆனால் ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை நாங்களும் கவனித்து வருகிறோம் என்று பிரதமர் அலுவலகமோ, வெளியுறவு விவகார அமைச்சகமோ ஏன் தெரிவிக்கவில்லை. 2) ஜின் ஜியாங்கில் நாங்கள் மனித உரிமை மீறல்களை கவனித்து வருகிறோம் என்று ஏன் கூறவில்லை. 3) திபெத்தில் தொடரும் அடக்குமுறையையும், 4) தென் சீனக் கடல் பகுதியையும் கவனித்து வருகிறோம்.. என்று ஏன் கூறவில்லை” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT