இந்தியா

கடவுள் பெயரில் வியாபாரம் நடத்த தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

பிடிஐ

கடவுள்களின் பெயரையும், படத்தையும் வியாபாரத்தில் பயன்படுத்த தடைவிதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான பொதுநலன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமித்தவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது:

இந்தியாவில் 33 ஆயிரம் கோடி கடவுள்கள், பெண் தெய்வங்கள், தேவர்கள் உள்ளனர். இது மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம். ஒரு வியாபாரி லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கடை வைத்தால் அதை எப்படி தடுக்க முடியும்?

அது அவரது மகள் பெயராகக் கூட இருக்கலாம். அதேபோல ஒருவரது கடையின் பெயர் பலகையிலும், அவரது தயாரிப்பு பொருளின் அட்டை மீதும் கடவுள் உருவத்தை பதிப்பதை தடுக்க முடியாது.

அது அவர்களது நம்பிக்கை தொடர்பான விஷயம். எனவே கடவுள் பெயரையும், படத்தையும் வியாபாரத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறிவிட்டது.

SCROLL FOR NEXT