கிறிஸ்டாலினா ஜார்ஜீவா 
இந்தியா

சர்வதேச பொருளாதார மந்த நிலையால் இந்தியாவுக்கு அதிக பாதிப்பு: பன்னாட்டு நிதியத்தின் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

“சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையால் உலகின் 90 சதவீத நாடுகளில் இந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. இந்தியா போன்ற மிகப் பெரிய சந்தைப் பொருளாதார நாடுகளில் இது அதிக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று பன்னாட்டு நிதியத்தின் (ஐஎம்எப்) புதிய தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா கூறினார்.

பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் வாஷிங்டனில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

இதையொட்டி பன்னாட்டு நிதி யத்தின் தலைவர் கிறிஸ்டாலினா நேற்று வாஷிங்டனில் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “சர்வ தேச அளவில் பொருளாதார நட வடிக்கைகள் தற்போது மந்தநிலை அடைந்துள்ளது. எனவே 2019-ல் உலகின் 90 சதவீத நாடுகளில் குறைந்த வளர்ச்சி விகிதத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

அமெரிக்கா மற்றும் ஜெர்மனி யில் வேலைவாய்ப்பின்மை வரலாறு காணாத அளவு அதிகரித் துள்ளது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் குறிப் பாக ஐரோப்பிய யூனியன் பகுதி யில் பொருளாதார நடவடிக்கைகள் பலம் குறைந்து வருகின்றன.

இந்தியா, பிரேசில் போன்ற மிகப் பெரிய சந்தைப் பொருளாதார நாடுகளில் இந்த மந்தநிலை அதிக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பல ஆண்டுகளாக விரைவான வளர்ச்சி ஏற்பட்டுவந்த நிலையில், அதன் வளர்ச்சி விகிதம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

எனவே அனைத்து நாடுகளும் நிதிக்கொள்கையை மதிநுட்பத் துடன் பயன்படுத்த வேண்டும். நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

அமைப்புரீதியான மாற்றங்கள் எவ்வாறு உற்பத்தி மற்றும் பொரு ளாதார பலன்களை அதிகரிக்கும் என்பது தொடர்பான பன்னாட்டு நிதியத்தின் புதிய ஆய்வு குறித்து அவர் கூறும்போது, “நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைய இந்த மாற்றங்கள் அவசியம்.

சரியான வரிசையில் சரியாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங் களால் வளர்ச்சி விகிதம் இரட்டிப் பாக வாய்ப்புள்ளது. இதனால் வளர்ந்த நாடுகளின் வாழ்க்கை தரத்தை வளரும் நாடுகள் அடைய முடியும்” என்றார்.

SCROLL FOR NEXT