இந்தியா

உத்தரகண்ட் முன்னாள் முதல்வருக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

டேராடூன்

உத்தரகண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் 2017-ம் ஆண்டு வரை அம்மாநில முதல்வராக பொறுப்பு வகித்து வந்தார். 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியதை அடுத்து அவர் பதவி விலகினார்.

ஹரீஷ் ராவத் போட்டியிட்ட ஹரித்வார் மற்றும் கிச்சா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். இதன்பிறகு காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். கடந்த மக்களவைத் தேர்தலிலும் உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதைடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுது்து அவர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT