இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். படம்: பிடிஐ 
இந்தியா

வங்கதேச பிரதமர் ஹசீனாவுடன் மன்மோகன், சோனியா சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய அவர், இரு நாடுகளிடையே பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இந்திய அரசியல் தலைவர்களை ஷேக் ஹசீனா சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், ஷேக் ஹசீனாவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினர். காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.

சுமார் அரைமணி நேரம் இச்சந்திப்பு நடந்தது. அப்போது இந்தியாவும் வங்கதேசமும் சந்திக்கும் பிரச்சினைகள், இரு தரப்பு உறவுகள் பற்றி ஆலோ சிக்கப்பட்டது. சந்திப்புக்குப் பின் பிரியங்கா வதேரா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘ஷேக் ஹசீனாவை மீண்டும் சந்திப்பதற் காக நீண்ட காலம் காத்திருந்தேன். அவர் என்னைக் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.

அவரது தனிப்பட்ட இழப்புகள், கடுமையான போராட்டங்களில் இருந்து வலிமையைப் பெற்றுள்ள அவர் எனக்கு உத்வேகத்தை அளிப்பவராக உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT