தீவிரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கு தொடர்பாக யாசின் மாலிக் உள்ளிட்ட 5 பேர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நேற்று முன்தினம் துணைக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
காஷ்மீரில் தீவிரவாத நடவடிக் கைகளை மேற்கொள்ள பாகிஸ் தானில் இருந்து பிரிவினைவாதி களுக்கு நிதியுதவி வழங்கப்படுவ தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட என்ஐஏ, பாகிஸ்தானில் இயங்கும் ஜமாத்-உத்-தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது, ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் தலைவர் சையது சலாலுதின் ஆகியோர் மீது கடந்த 2017-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
மேலும், இந்த வழக்கு தொடர் பாக ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக், ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் லீக் தலைவர் மசரத் ஆலம் உட்பட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப் பட்டனர். இந்த வழக்கில் என்ஐஏ சார்பில் ஏற்கெனவே குற்றப்பத் திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்தக் குற்றப்பத்திரிகையை என்ஐஏ உயரதிகாரிகள் தாக்கல் செய்தனர்.
சுமார் 3,000 பக்கங்கள் அடங்கிய அந்தக் குற்றப்பத்திரிகையில் கூறப் பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:
காஷ்மீரில் அமைதியை சீர் குலைக்கும் செயல்களை மேற் கொள்வதற்காக, பாகிஸ்தானில் இயங்கும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளிடம் இருந்து யாசின் மாலிக் உள்ளிட்ட பிரிவினைவாதி கள் பல ஆண்டுகளாக நிதி பெற்று வந்திருக்கின்றனர். மேலும், பல் வேறு நாடுகளில் இருந்து ஹவாலா மூலமாகவும் அவர்களுக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
இந்த நிதியை பெறுவதற்கு, பாகிஸ்தான் தூதரகம் அவர் களுக்கு பல வகைகளில் உதவி செய்துள்ளது. இதுதொடர்பான வாட்ஸ்-அப் குறுஞ்செய்திகள், இ-மெயில் தகவல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
இந்த நிதியைக் கொண்டு, காஷ்மீரில் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவது, ராணுவ வீரர்கள் மீது கல்வீசுவது, கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற செயல்களை அவர்கள் அரங்கேற்றி வந்துள்ள னர். இதுதவிர, காஷ்மீர் இளை ஞர்களை தீவிரவாத நடவடிக்கை யிலும் அவர்கள் ஈடுபட வைத்துள் ளனர். இவ்வாறு அதில் என்ஐஏ தெரிவித்துள்ளது.