மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளபோதிலும், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என கர்நாடக மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களை தற்போது மத்தியில் பதவியேற்க இருக்கும் பா.ஜ.க. அரசு மாற்ற திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 12 மாநில ஆளுநர்கள் தங்களுடைய பதவிக் காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்வார்கள் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் பெங்களூரில் ஆளுநர் பரத்வாஜ் கூறுகையில், “மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜ.க. ஆட்சி அமைய விருப்பதால், ஆளுநர் பதவியை நான் ராஜினாமா செய்யப்போவ தாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை. என்னுடைய பதவிக் காலம் முடியும் வரை கர்நாடக ஆளுநராக இருப்பேன். யாருடைய அழுத்தத்தின் காரண மாகவும் ராஜினாமா செய்ய மாட்டேன்” என்றார்.
பாஜகவுக்கு குடைச்சல்
கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க. ஆட்சிக்கு பெரும் குடைச்சலாக இருந்த ஆளுநர் பரத்வாஜ், நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்க மானவர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சர வையில் அவர் இடம்பெற்றிருந் தார். மன்மோகன்சிங் தலைமை யிலான முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சட்ட அமைச்சராக பரத்வாஜ் பதவி வகித்துள்ளார்.
2008-ம் ஆண்டு தென்னிந்தி யாவில் முதல்முறையாக கர்நாட கத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத் தது. அந்தக் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே 2009 ஜூன் 25-ம் தேதி கர்நாடக ஆளுநராக பரத்வாஜ் நியமிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
“இந்திரா காந்தியின் இன் னொரு உருவம் நான். ஒருபோதும் ஊழலையும்,ஒழுக்கமில்லாத ஆட்சியையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என கூறி, அப்போ தைய முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய பரத்வாஜ் அனுமதியளித்தார். அதுமட்டுமின்றி அமைச்சர்களாக இருந்த ரெட்டி சகோதரர்கள் மீது சுரங்க முறைகேடு புகார் எழுந்தபோது, அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பரத்வாஜ் பகிரங்கமாகவே தெரிவித்தார். இதனால் பரத்வாஜிற்கும், பா.ஜ.க.விற்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.
எடியூரப்பா திட்டம்
இப்போது மத்தியில் பாஜக ஆட்சி அமையவுள்ளதால், ஆளுநர் பரத் வாஜை மாற்ற கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள் கடும் முயற்சி மேற் கொண்டுள்ளனர். தான் முதல்வர் பதவியை இழப்பதற்கு காரண மாக இருந்த பரத்வாஜ், ஆளுந ராக நீடிக்கக்கூடாது என பாஜக மேலிடத் தலைவர்களிடம் எடியூரப்பா அழுத்தம் கொடுத் திருப்பதாகக் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரு கிறது. பல நேரங்களில் ஆளுநர் பரத்வாஜ் காங்கிரஸ் தொண்ட ராகவே செயல்படுகிறார். அவரை நீக்கினால்தான் கர்நாடகாவில் தாமரை மலரும் என அவர் கூறியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.