பற்கற் உடைக்கப்பட்டு மலம் உட்கொள்ளச் செய்த கொடுமைக்கு ஆளானவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். | படம்: ஏஎன்ஐ 
இந்தியா

ஒடிசாவில் சூனியம் வைத்ததாகக் கூறி 6 பேர் சித்ரவதை: 29 பேர் கைது

செய்திப்பிரிவு

புவனேஸ்வர்

ஒடிசா மாநிலம், கிராமம் ஒன்றில் பலர் மர்மமான முறையில் மரணமடைந்ததன் பின்னணியில் பில்லி சூனியம் வைக்கும் கும்பல் ஒன்று இருந்ததாக எழுந்த செய்திகளை அடுத்து, பில்லி சூனியம் வைத்ததாக வயதான 6 பேரைப் பிடித்து கட்டாயப்படுத்தி மலம் தின்ன வைத்த கொடுமை நடந்துள்ளது. இதில் 22 பெண்கள் உட்பட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கஞ்சம் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் பிரிஜேஷ் குமார் ராய் கூறியதாவது:

கோபாபூர் கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக ஏழுபேர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். கடந்த வாரம் மூன்று பெண்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். இந்த மரணங்களுக்கு பில்லி சூன்யம் வைக்கப்பட்டதே காரணம் என்று கிராமத்தினர் முடிவு செய்தனர்.

இதனை அடுத்து கிராமத்தில் 6 பேரை கிராமத்தினர் தண்டிக்க முடிவு செய்தனர். அந்த ஆறுபேரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

கடந்த திங்கள் அன்று இரவு கிராமத்தினர் ஒன்றுகூடி ஜோகி தாஸ், சானியா நஹக், ஜோகேந்திர நஹாக், ராமா நஹக், ஹரி நஹக் மற்றும் ஜூரியா நஹக் ஆகிய ஆறு பேரின் பற்களையும் உடைத்தனர். அதன் பின் மனித மலத்தை கட்டாயப்படுத்தி உட்கொள்ளச் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று 26 பெண்கள் உட்பட 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கிராமத்தினரின் தன்னிச்சையான பஞ்சாயத்தில் பாதிக்கப்பட்ட 6 பேரும் பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

-ஏஎன்ஐ

SCROLL FOR NEXT