இந்தியா

ஆக்கிரமிப்பு நோக்கம் இந்தியாவிடம் இல்லை: ராணுவத் தளபதி பிபின் ராவத் விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

“பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கம் இந்தியாவிடம் இல்லை. பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான கடமைகளை இந்தியா நிறைவேற்றும்” என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறினார்.

ராணுவத் தளபதி பிபின் ராவத் 5 நாள் பயணமாக மாலத் தீவு சென்றுள்ளார். இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை வலுப் படுத்துவதற்காக அந்நாட்டு ராணுவ உயரதிகாரிளுடன் அவர் விரிவான பேச்சு நடத்தியுள்ளார். மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ்-ஐ அவர் நேற்று சந்தித்து பேசினார். இதை யடுத்து, மாலே நகரில் வெளியுறவு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் அவர் பேசியதாவது:

எரிசக்தி வளம் மிகுந்த மேற்கு ஆசியாவில் ஸ்திரமற்ற சூழ் நிலை நிலவுவதால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள் ளது. அமெரிக்கா ஈரான் இடையி லான மோதல் போக்கு கவலை அளிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் அண்டை நாடு மேற்கொண்டுள்ள மறைமுகப் போருக்கு எதிராக இந்திய ஆயுதப் படைகள் போரிட்டு வருகின்றன. அண்டை நாடு களில் இருந்து இந்தியாவின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் எழும் போது, ராணுவ பலத்தை அதி கரிப்பது இந்தியாவின் உரிமை யாகும்.

பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. எங்கள் சித்தாந்தத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் விருப்பமும் இல்லை. அதேவேளையில் சுயாட்சி மற்றும் முடிவுகள் எடுப்பதில் தனக் குள்ள சுதந்திரத்தை இந்தியா தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும். மேலும் அண்டை நாடுகளில் இருந்து வரும் பாது காப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள படை பலத்தை அதிரிக்கும்.

பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான கடமைகளை ஒரு பொறுப்புள்ள வளரும் நாடாக இந்தியா நிறைவேற்றும்.

நாம் இணைந்து செயல்பட்டால் பிராந்திய அமைதிக்கு எதிரான அச்சுறுத்தல்களை களைய முடியும். இந்தியப் பெருங்கடல் பகுதி வர்த்தக வழித்தடத்தில் இடையூறுகள் ஏற்பட்டால் அது இந்தியா, மாலத்தீவுகள் ஆகிய இரு நாடுகளுக்கும் பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்தும். நம் இரு நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதி வாழ்வாதாரப் பகுதியாகும். இவ்வாறு ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறினார்.

மாலத்தீவு அதிபராக இப்ராஹிம் சோலிஹ் கடந்த ஆண்டு நவம்பரில் பதவியேற்ற பிறகு இந்தியா மாலத்தீவு இடையிலான பாதுகாப்பு உறவுகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT