இந்தியா

சசி தரூரின் ஆக்ஸ்போர்டு பேச்சுக்கு பிரதமர் மோடி பாராட்டு

பிடிஐ

ஆக்ஸ்போர்ட் யூனியன் சொசைட்டியில் காலனியாதிக்கம் பற்றி சசி தரூரின் நறுக்குத் தெறித்த பேச்சு இணையதளங்களில் லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்துள்ள நிலையில், அந்த வாதத் திறமையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

"சசி தரூரின் பேச்சு தற்போது யூடியூபில் வைரலாகியுள்ளது. நாட்டுப்பற்றுடைய இந்தியர்களின் உணர்வுகளுடன் சசிதரூரின் பேச்சு ஒன்றிப்போயுள்ளது. சரியான விஷயங்களை சரியான இடத்தில் திறமையான வாதங்களை முன்வைப்பதன் மூலம் என்ன மாதிரியான எண்ண அலைகள் ஏற்படும் என்பதை சசிதரூரின் பேச்சு எடுத்துக் காட்டியுள்ளது” என்றார் நரேந்திர மோடி.

நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான சபாநாயகரின் ஆய்வு முனைப்பைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் சசிதரூரை பாராட்டியுள்ளார். இந்த அமர்வில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த சசி தரூர், பிரதமர் மோடியின் பாராட்டை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்.

இந்த அமர்வில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உட்பட பலரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியை அவ்வப்போது பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் கட்சித் தலைமையின் அதிருப்தியை சம்பாதித்திருக்கும் நிலையில் தற்போது பிரதமர் மோடியின் பாராட்டுதல் சசிதரூருக்கு வந்து சேர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT