இந்தியா

ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்குவது இந்தியாவின் உரிமை: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஐ.நா.சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி யுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சென்றிருந்தார். அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜெய்சங்கர் நேற்று முன்தினம் டெல்லி திரும்பினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘ ஐ.நாவில் நடந்த பல்வேறு கூட்டங்களிலும் காஷ்மீர் விஷயம் குறித்து விளக்கமாக கூறப்பட்டது. காஷ்மீரில் என்ன நடந்தது என்பது பற்றியும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு பற்றியும் எதற்காக அந்தப் பிரிவை நீக்கினோம் என்றும் உலகத் தலைவர்களிடம் விளக்கினோம். இந்தியாவின் நிலைக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா உட்பட 3வது நாடுகளின் தலை யீட்டை ஏற்கமாட்டோம். இதில் இந்தியா தெளிவாக உள்ளது.

நாம் யாரிடம் ஆயுதம் வாங்க வேண்டும் என்பதை இன்னொரு நாடு முடிவு செய்ய முடியாது. ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்குவது இந்தியாவின் உரிமை. எல்லாரின் நலனையும் நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டுதான் முடிவுகள் எடுக்கப்படுகிறது’’ என்றார்.

SCROLL FOR NEXT