கோப்புப் படம் 
இந்தியா

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அசாமில் சிவன் கோயிலை பராமரிக்கும் முஸ்லிம் முதியவர்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி

மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக அசாமில் முஸ்லிம் மதத் தைச் சேர்ந்த முதியவர் சிவன் கோயிலை பராமரித்து வருகிறார்.

அசாம் மாநிலம் குவாஹாட்டி நகரில் ரங்மகால் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 70 வயதான முதியவர் மோட்டிபர் ரஹ்மான். அவர் வசிக்கும் பகுதி யில் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலை ரஹ்மான் பராமரித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக சிவன் கோயிலை தூய்மையாக பரா மரித்து சேவை செய்து வரு கின்றனர். சிவனை அன்பு மேலிட ‘நானா’ (தாத்தா) என்றுதான் அழைக்கிறார் ரஹ்மான்.

தினமும் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்து தரையை கூட்டி சுத்தம் செய்து விளக்குகளை யும் ஊதுபத்திகளையும் ஏற்றி வைக்கிறார் ரஹ்மான். இந்தக் கோயிலுக்கு ஏராளமான இந்துக் கள் வந்து பஜனைப் பாடல்கள் பாடுகின்றனர். அதேநேரம், முஸ் லிம்களும் இந்த சிவன் கோயி லுக்கு வருகின்றனர்.

இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், ‘‘எனது மூதாதையர் கனவில் சிவன் தோன்றி இந்தக் கோயிலை தூய்மையாக பராமரித் துவரச் சொல்லி இருக்கிறார். அதிலிருந்து எங்கள் தலை முறையினர் சுமார் 500 ஆண்டு களாக இந்த சிவன் கோயிலை பராமரித்து வருகின்றனர். நானும் இந்தப் பணியை செய்கிறேன். எனக்கு பின் எனது மகன்களும் கோயிலை தூய்மையாக பராமரிப் பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

2006-ம் ஆண்டில் நான் ஹஜ் யாத்திரை சென்றபோது எனது மகன்கள்தான் கோயிலை பராமரித்தனர். இக்கோயிலுக்கு ஏராளமான முஸ்லிம்களும் வந்து வழிபடுகின்றனர். இந்து - முஸ்லிம் நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த சிவன் கோயில் உள்ளது’’ என்றார்.

SCROLL FOR NEXT