ஸ்ரீநகர்,
காஷ்மீரில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
காண்டர்பால் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக வந்தத் தகவலை அடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனை அடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவர் யார், எப்பகுதியைச்சேர்ந்தவர் போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-பிடிஐ