வாழும் கலை அமைப்பின் நிறு வனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ், தலிபான் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், அவருக் கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.
“ஐஎஸ் அமைப்பு, பாகிஸ் தானை மையமாகக் கொண்டு செயல்படும் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு போன்றவை ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு கொலை மிரட்டல் விடுத் துள்ளன. அவர் மலேசியா சென்றிருந்த போது, ஐஎஸ் அமைப்பு அவர் தங்கியிருந்த விடுதியின் மேலாளருக்கு மிரட்டல் விடுத்தது. அவரைத் தங்க அனு மதித்தால் விடுதியைத் தரைமட்ட மாக்குவதுடன் இந்து செயல்பாட் டாளரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரைக் கொன்று விடுவதாகவும் கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
தான் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல என்று அவர் கூறினாலும், ‘ஈரான், இராக்கில் உள்ள முஸ்லிம்களை அவர் மத மாற்றம் செய்கிறார். இஸ்லாமிய விவகாரங்களில் அவர் குறுக்கிடு றார்’ என ஐஎஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள வாழும் கலை அமைப்பின் அலுவல கம் தலிபான் அமைப்புகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
எனவே, அவரின் உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கவனத்தில் கொண்டு, உங்கள் மாநிலங்களுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வரும்போது, அவருக்கான பாது காப்பை அதிகரிக்க வேண்டும்” என மாநிலங்களின் தலைமைச் செய லாளர்களுக்கு மத்திய உள்துறை தகவல் அனுப்பியுள்ளது.