பார்மர் (ராஜஸ்தான்), பிடிஐ
ராஜஸ்தான் பார்மர் மாவட்டத்தில் உள்ள சிறை ஒன்றில் 40 வயது கைதி ஒருவர் வெறுப்பில் தற்கொலை செய்துகொள்வதற்காக கையாண்ட வழிமுறை பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சங்கராம் பீல் என்ற இந்த 40 வயது கைதி அவரது மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் செப்ல்21ம் தேதி கோர்ட் உத்தரவின் பேரில் பார்மர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் தாடியை ஷேவிங் செய்ய வேண்டும் என்று இவர் சிறைக்காவலர்களிடம் தெரிவிக்க அவருக்கு பிளேடு ஒன்றை அளித்துள்ளனர். ஆனால் அவரோ பிளேடைக் கொண்டு தன் ஆணுறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்றது சிறை அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ரத்தம் வழிய அவர் தன் சிறை அறையில் பயங்கரமாக அலறியுள்ளார், இதனையடுத்து அறைக்கு விரைந்து வந்த ஊழியர்கள் அவரது நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு அவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்று அனுமதித்தனர்.
இவருக்கு எதிரான புகார் ஷியோ போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது, குடும்பத் தகராறில் மனைவி தலையில் கல்லைப் போட்டுக் கொன்றதாக இவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த அவர் அதிர்ச்சிகரமான தற்கொலை முடிவுக்குச் சென்றது பார்மர் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.