இந்தியா

54 ஆண்டு எம்எல்ஏவாக இருந்த மாணி தொகுதியில் வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

பளா (கேரளா)

கேரளாவின் பளா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

கேரளாவில் பளா சட்டப்பேர வைத் தொகுதியின் எம்எல்ஏ.வாக இருந்தவர் கேரள காங்கிரஸ் (எம்) பிரிவு தலைவர் கே.எம்.மாணி(86). இவர் கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால், பளா தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடந்தது. இறுதி நிலவரப்படி வாக்குப்பதிவு 71.13 சதவீதமாக இருந்தது.

கே.எம். மாணியுடன் அரசியலில் நெருக்கமாக பணியாற்றிய ஜோஸ் டாம் புலிக்குன்னில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடு கிறார். பாஜக சார்பில் கட்சியின் கோட்டயம் மாவட்ட தலைவர் என்.ஹரியும், இடதுசாரிகள் ஆதர வோடு தேசியவாத காங்கிரஸ் வேட் பாளர் மணி சி.கப்பென் ஆகியோர் உட்பட 13 பேர் போட்டியிட்டனர்.

பதிவான வாக்குகள் வரும் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது. மறைந்த கே.எம்.மாணி 1965-ம் ஆண்டு முதல் பளா தொகுதி எம்எல்ஏ.வாக தொடர்ந்து தேர்ந் தெடுக்கப்பட்டு வந்தார். அவர் மறைந்த நிலையில், 54 ஆண்டு களுக்குப் பிறகு வேறு எம்எல்ஏவை பளா தொகுதி மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT