இந்தியா

சிறையில் பெண் மரணம்: அறிக்கை கேட்கிறது பெண்கள் ஆணையம்

பிடிஐ

அசாம் மாநிலத்தின் சிறை ஒன்றில் மேகாலயா மாநில பழங்குடி பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக, அம்மாநில பெண்கள் ஆணையம் அசாம் காவல்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது.

அசாம் மாநிலம் ஷில்லாங்கில் உள்ள நாங்தைமாய் எனும் பகுதியைச் சேர்ந்தவர் விக்டோரியா தையூன் கர்கோங்கர். இவர் நேற்று முன்தினம் அசாம் மாநிலம் குவாஹாட்டியில் உள்ள திஸ்பூர் காவல் நிலையத்தின் கழிவறையில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக, சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு மேகாலயா போலீஸாரை அனுப்பி யுள்ளதாகவும், அவர்களிடமிருந்து அறிக்கை கேட்டுள்ளதாகவும் மேகாலயா பெண்கள் ஆணையத் தலைவர் தெய்லின் பன்பூ கூறியுள்ளார்.

ஆனால் அசாம் காவல் துறையிடமிருந்து தங்களுக்கு முறையான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று மேகாலயா மாநில போலீஸார் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தான் விரைவில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யப்போவதாக மேகாலயா போலீஸ் உயர் அதிகாரி ஜே.ராபா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT