இந்தியா

கழிப்பறை கட்டித்தராததால் ஜார்கண்டில் இளம்பெண் தற்கொலை

ஏஎன்ஐ

வீட்டில் கழிப்பறை அமைத்து தராததால் மனமுடைந்த ஜார்கண்டை சேர்ந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

ஜார்கண்டின் தும்கா பகுதியை செர்ந்தவர் குஷ்பூ குமாரி (17) பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டில் கழிப்பறை இல்லாததால், அன்றாட உபாதைகளுக்கு வெட்டவெளியை நாடி செல்ல வேண்டியிருந்தது. அல்லது நெடுந்தூரம் இருக்கும் தனது பாட்டி வீட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது.

இது அவருக்கு மிகவும் சங்கடமாக இருந்த நிலையில் தனது பெற்றொரிடம் வீட்டில் கழிப்பறை அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

இதனை கண்டுகொள்ளாத அவர்கள் குஷ்பூவை உதாசினப்படுத்தனர். இதனை அடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) குஷ்பூ அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குஷ்பூவின் தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஷ்பூவின் திருமணத்துக்காக பணம் சேர்த்து வந்ததாகவும், கழிப்பறை கட்டினால் பணம் செலவாகிவிடும் என்ற காரணத்தால் குஷ்பூவை உதாசினப்படுத்தியதாக அவரது தந்தை ஸ்ரீபதி யாதவ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT