அகமதாபாத்
குஜராத் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி 4 போலீஸ் அதிகாரிகள் தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2004-ல் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட 4 பேர் போலி என்கவுன்ட்டரில் கொல் லப்பட்ட வழக்கு, கடந்த 2011 டிசம்பரில் சிபிஐ வசம் ஒப் படைக்கப்பட்டது. இவ்வழக்கில் முன்னாள் பொறுப்பு டிஜிபி பி.பி.பாண்டே, அப்போதைய ஐபிஎஸ் அதிகாரிகள் டி.ஜி.வன்சரா, ஜி.எல்.சிங்கால், என்.கே.அமீன், தருண் பரோட், ஜே.ஜி.பார்மர், அனஜு சவுத்ரி ஆகியோருக்கு எதிராக கடந்த 2013 ஜூலையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இவர்களில் வன்சரா, அமீன் ஆகியோருக்கு எதிரான குற்ற நடவடிக்கைக்கு குஜராத் அரசு அனுமதி அளிக்கவில்லை என்ப தால் இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதே காரணத்திற்காக தங் களையும் வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி சிங்கால், தருண் பரோட், ஜே.ஜி.பார்மர், அனஜு சவுத்ரி ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், “கொலை உள்ளிட்ட கடும் குற்றச் சாட்டுகள் இருப்பதால் இவர்கள் மீது வழக்கு தொடர அரசின் அனுமதி தேவையில்லை. வன் சரா, அமீன் ஆகியோரை விடுவித் ததை போல தங்களை விடுவிக்க வேண்டும் என இவர்கள் நால் வரும் கோர முடியாது. குற்றத் தில் ஒவ்வொருவரின் பங்கும் வெவ்வேறானது. அவர்களுக்கு எதிரான ஆதாரங்களும் வெவ் வேறானவை” என்று கூறியுள்ளது.