சேகர் ரெட்டி 
இந்தியா

திருமலை திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு- சேகர் ரெட்டிக்கு மீண்டும் வாய்ப்பு

செய்திப்பிரிவு

என்.மகேஷ்குமார்

திருமலை 

திருமலை திருப்பதி தேவஸ் தானத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அரசு சார்பில் அறங்காவலர் குழு அமைக்கப்படுகிறது. ஓராண்டு முடிவில் அதே குழுவுக்கு பதவி நீட்டிக்கப்படும். அல்லது புதிய குழு அமைக்கப்படும்.

இக்குழுவில் இடம்பெற பெரும் போட்டி நிலவுகிறது. இப் பதவிக்கு ஆந்திராவில் இருந்து பெரும்பாலானோரும் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் முந்தையை தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இது விரிவுபடுத்தப்பட்டு, மகாராஷ்டிரா மாநிலத்தவரும் குழுவில் இடம்பெற்றனர்.

இந்நிலையில் ஜெகன்மோகன் தலைமையிலான தற்போதைய ஆட்சியில் ஆந்திரா-8, தெலங் கானா-7, தமிழகம்-4, கர்நாடகா-3, மகாராஷ்டிரா-1, டெல்லி-1 என மொத்தம் 24 பேர், அதிகாரிகள் 4 பேர் என மொத்தம் 28 பேர் புதிய அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சிறப்பு உறுப் பினர்களாக திருப்பதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டி, முன்னாள் உறுப்பினர் சேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேரை ஆந்திர அரசு நேற்று முன்தினம் இரவு நியமித்தது.

இதனால் மொத்த உறுப்பினர் கள் எண்ணிக்கை முன்னெப் போதும் இல்லாத வகையில் 35 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் வரும் திங்கள்கிழமை திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் பதவியேற்க உள்ளனர்.

இந்நிலையில் உறுப்பினர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ள தால் அன்னமய்யா பவனில் ஆலோசனை கூட்டம் நடத்த போதிய இடமில்லை. இதனால் வேறு இடத்தை தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.

மேலும் பல்வேறு குற்றச்சாட் டுக்கு ஆளாகிய, அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினர் சேகர் ரெட்டிக்கு மீண்டும் ஜெகன் வாய்ப்பு அளித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

“பெருமாளுக்கோ அல்லது பக்தர்களுக்கோ சேவை செய்யும் எண்ணம் இல்லாதவர்களுக்கு உறுப்பினர் பதவி வழங்கியது ஏன்? அண்டை மாநிலமான தெலங் கானாவுக்கு அறங்காவலர் குழு வில் 7 உறுப்பினர் பதவி கொடுத்தது ஏன்?” எனவும் பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

SCROLL FOR NEXT