அல்கா லம்பா 
இந்தியா

காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் அல்கா லம்பா தகுதி நீக்கம்: டெல்லி சபாநாயகர் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை தொடர்ந்து அவரை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் நேற்று உத்தரவிட்டார்.

டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் அல்கா லம்பா. கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி நடவடிக்கையில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ஆம் ஆத்மி கட்சியை விட்டு விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவர் மீது கட்சித் தாவல் தடை சடத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் ராம் நிவாஸ் கோயலிடம் ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் மனு அளித்தார்.

இதன் அடிப்படையில் அல்கா லம்பாவை சட்டப்பேரவையில் இருந்து தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் நேற்று உத்தரவிட்டார். இந்த தகுதி நீக்கம் செப்டம்பர் 6 முதல் நடைமுறைக்கு வருவதாக அவர் கூறியுள்ளார்.

கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த கபில் மிஸ்ரா, சந்தீப் குமார், அனில் பாஜ்பாய், தேவேந்திர ஷெகாவத் ஆகிய 4 எம்எல்ஏக்கள் ஏற்கெனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள னர். இந்நிலையில் தற்போது அல்கா லம்பா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT