புதுடெல்லி
நக்சல்கள் புதைத்து வைக்கும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்து கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 73 வீரர்கள் உயிரிழந் துள்ளனர். இதனால், நக்சல்களை ஒடுக்கும் பணியையும் வெடிகுண்டு களை கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் நடவடிக்கைகளிலும் வீரர்கள் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.
இதுகுறித்து மத்திய அரசு அதி காரிகள் நேற்று கூறியதாவது:
நாட்டின் சில மாநிலங்களில் நக்சல்களின் ஆதிக்கம் உள்ளது. நக்சல்கள் தேடுதல் வேட்டையின் போது, அவர்கள் மறைத்து வைத் திருக்கும் சக்திவாய்ந்த வெடி குண்டுகளில் (ஐஇடி) சிக்கி பலர் உயிரிழக்கின்றனர் அல்லது படுகாயம் அடைகின்றனர். அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 73 வீரர்கள் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந் துள்ளனர். மேலும், நக்சல் களின் வெடிகுண்டுகளில் சிக்கி 179 வீரர்கள் படுகாயம் அடைந் துள்ளனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத் தின்தான் அதிக எண்ணிக்கையில் வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நக்சல்களை ஒழிக்கும் பணி முடுக்கி விடப்பட் டுள்ளது. மேலும், நக்சல்கள் மறைத்து வைத்திருக்கும் வெடி குண்டுகளைக் கண்டுபிடித்து செய லிழக்க செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணியில் சிஆர்பிஎப், மாநில போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு 43 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற் றுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 79 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத நில வரப்படி 51 வெடிகுண்டு தாக்குதல் கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் வீரர்கள் மட்டு மன்றி பொதுமக்களில் சிலரும் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சொத்துகள் முடக்கம்
இதனிடையே வினோத் குமார் கஞ்சு, பிரதீப் ராம் போன்ற மாவோ யிஸ்ட்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சொந்தமான அசையா மற்றும் அசையும் சொத்துகளை அமலாக்கத் துறை தற்காலிகமாக முடக்கியுள்ளது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரி பாக் மாவட்டத்தில் இந்த அசையா சொத்துகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.1.49 கோடி ரொக்கம், ரூ.89 லட்சம் மதிப்புள்ள 5 வாகனங்கள், 8 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.35.18 லட்சம் டெபாசிட் ஆகியவை முடக் கப்பட்ட அசையும் சொத்துகள் ஆகும்.
திரிதிய ப்ரஸ்துதி கமிட்டி (டிபிசி) என்ற இடதுசாரி தீவிரவாத அமைப்பை சேர்ந்த இவர்கள், சத்ரா மாவட்டம், மகத்-அம்ரபலி நிலக்கரி சுரங்கப் பகுதியில் பணியாற்றும் ஒப்பந்ததாரர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதன் மூலம் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். இது தொடர்பாக மாநில போலீஸார் பதிவுசெய்த வழக்கில் சட்டவிரோத பணப் பரி வர்த்தனை விசாரணையை அம லாக்கத் துறையினர் மேற்கொண்ட னர். டிபிசி அமைப்பை ஜார்க்கண்ட் அரசு தடை செய்துள்ளது. இதன் பெரும்பாலான உறுப்பினர்கள் சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஆவர்.