ஜெய்ப்பூர்
ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த வழக்கில் இந்தி நடிகர் சன்னி தியோல், நடிகை கரிஷ்மா கபூர் ஆகியோர் மீது ராஜஸ்தான் ரயில்வே நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நரேனா பகுதியில் 1997-ம் ஆண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில் ஒரு படப்பிடிப்பின்போது இந்தி நடிகர் சன்னி தியோல், கரிஷ்மா கபூர் ஆகியோர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதனால், ரயில் 25 நிமிடங்கள் தாமதமானது. அபாய சங்கிலியை சட்டவிரோத மாக இழுத்தததாக சன்னிதியோல், கரிஷ்மா கபூர் ஆகியோர் மீது நரேனா ரயில் நிலையத்தின் துணை ஸ்டேஷன் மாஸ்டர் புகார் அளித்தார்.
இதுதொட்ரபாக 2009-ம் ஆண்டு இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து இருவரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 2010-ம் ஆண்டில் மனுதாக்கல் செய் தனர். சன்னி தியோலையும் கரிஷ்மாவையும் செஷன்ஸ் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது.
இந்நிலையில், இருவர் மீதும் ரயில்வே நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தது. இதை எதிர்த்து சன்னி தியோலும் கரிஷ்மா கபூரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தனர். இதை அவர்களது வழக்கறிஞர் ஏ.கே.ஜெயின் நேற்று ஜெய்ப்பூரில் தெரிவித்தார்.