புதுடெல்லி
ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரு மான ப.சிதம்பரம் நீதிமன்ற உத்தரவுப்படி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற் கெனவே, சிறையில் அவரை சந்திக்க காங்கிரஸ் நிர்வாகிகள் முயற்சித்தபோது முறையான அனுமதி பெற்று வராததால் அவர்களுக்கு அனுமதி மறுக் கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் நேற்று முறைப்படி அனுமதி பெற்று திஹார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்தனர். 30 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் உடனிருந்தார்.