இந்தியா

ஒரே நிறுவனத்தில் ஓய்வு வரை பணியாற்றுவது பழைய சிந்தனை: ஆய்வில் 75% இந்தியர்கள் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஒரே நிறுவனத்துக்காக ஓய்வு பெறும் வரை பணியாற்றுவது என்பது பழங்கால சிந்தனை என 75 சதவீத இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போதைய கல்வித் தரம், பணிகளை தேர்வு செய்யும் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சர்வதேச நிறுவனம் ஒன்றின் சார்பில் உலக அளவில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

19 நாடுகளைச் சேர்ந்த 16 முதல் 70 வயதுக்குட்பட்ட 11 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 1,000 பேர் இந்தியர்கள் ஆவர்.

இந்நிலையில், இந்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய அம்சங்களாவன:

இந்தியாவின் தற்போதைய கல்வி முறையானது இன்றைய தலைமுறை மாணவர்களை மேம்படுத்த போது மானதாக இருப்பதாக 59 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல, இன்றைய மாணவர்களின் கல்விக்கு தொழில்நுட்பங்கள் பேருதவியாக இருப்பதாக கணிச மான இந்தியர்கள் கூறியுள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வரும் காலங்களில் நோட்டு, புத்தகங் கள் வழக்கொழிந்து போய்விடும் என் றும், மெய்நிகர் (விர்ச்சுவல்) வகுப்பு கள், வீடியோ மூலமாக பாடங்கள் கற்கும் நடைமுறை போன்றவை பரவ லாகிவிடும் எனவும்79 சதவீத இந்தியர் கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே, உயர்நிலைக் கல்வியை முடித்தபோதிலும், வேலை நிமித்தமாக சில படிப்புகளை மேற் கொள்ள வேண்டிய கட்டாயம் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்டிருப்பதாக 76 சதவீத இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஒரே நிறுவனத்துக்காக ஓய்வு பெறும்வரை பணியாற்றுவது என்பது பழங்கால சிந்தனை என 75 சதவீத இந்தியர்கள் கருத்து கூறியுள்ளனர். அதேபோல, வழக்க மான பணி ஓய்வுக்கு பிறகு, தங்களுக்கு பிடித்தமான பணிகளை செய்ய விரும்புவதாக 25 சதவீதம் பேர் கூறியிருக்கின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வரும் காலங்களில் நோட்டு, புத்தகங்கள் வழக்கொழிந்து போய்விடும் என்றும், மெய்நிகர் (விர்ச்சுவல்) வகுப்புகள், வீடியோ மூலமாக பாடங்கள் கற்கும் நடைமுறை போன்றவை பரவலாகிவிடும் எனவும் 79 சதவீத இந்தியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT