இந்தியா

குர்கான்வாசியின் வீட்டு மின் கட்டண பில் ரூ.75 கோடி: அதிர்ச்சி அளித்த மின்வாரியம்

செய்திப்பிரிவு

டெல்லியை அடுத்த குர்கானில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.75 கோடி மின் கட்டணம் செலுத்துமாறு மின் வாரியம் பில் அனுப்பி உள்ளது. இதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து ஜிதேந்திர குமார் கூறியதாவது:

குர்கானில் வசிக்கும் எனது வீட்டுக்கு சமீபத்தில் 2 மாதங்களுக் கான மின் கட்டண பில் வந்தது. அதில் ரூ.75 கோடியே 61 லட்சம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. இந்த மின் கட்டணம் என்னுடைய வீட்டின் மதிப்பைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இதற்கு முன்பு நான் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரமும் அதிகபட்சமாக ரூ.9 ஆயிரமும்தான் மின் கட்டணம் செலுத்தி உள்ளேன். இப்போது திடீரென கோடிக் கணக்கில் பில் தொகை வந்துள்ளது. இந்தக் குளறுபடியை சரிசெய்யக் கோரி மின் வாரியத்தை பல தடவை அணுகியபோதும் இன்னும் பிரச்சினை தீரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT