கோப்புப்படம் 
இந்தியா

தேஜாஸ் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பயணம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தேஜாஸ் போர் விமானத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை பயணம் செய்யவுள்ளார்.

இந்திய விமானப் படைக்காக இலகு ரக போர் விமானமான தேஜாஸை, பெஹேமோத் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் தயாரித்துள்ளது. 4-ம் தலைமுறை போர் விமானமான தேஜாஸ், இந்திய விமானப்படை யில் அண்மையில் இணைக்கப் பட்டது. பல நவீன ரேடார்களும், பாதுகாப்பு கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விமானத் தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதன்முறையாக நாளை பெங்களூருவில் பயணம் செய்யவுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT