இந்தியா

எந்த அரசியல் கட்சியிலும் நான் சேரவில்லை: நடிகை ஊர்மிளா விளக்கம்

செய்திப்பிரிவு

மும்பை

எந்த அரசியல் கட்சியிலும் தாம் சேரவில்லை என்றும், இது தொடர்பாக ஊகத் தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் பாலிவுட் நடிகை ஊர்மிளா தெரிவித் துள்ளார்.

பாலிவுட் நடிகையான ஊர்மிளா, காங்கிரஸ் கட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைந்தார். இதன் தொடர்ச்சி யாக, அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட கட்சித் தலைமை வாய்ப்பளித்தது. அதன் படி, வடக்கு மும்பை தொகுதியில் பாஜகவின் கோபால் ஷெட்டியை எதிர்த்து போட்டியிட்டு அவர் தோல்வி கண்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து தாம் விலகுவ தாக ஊர்மிளா கடந்த வாரம் அறி வித்தார். கட்சி உள் விவகாரம் காரணமாகவே தாம் விலகுவதாக வும் அவர் விளக்கம் அளித் திருந்தார்.

இதனிடையே, அவர் சிவ சேனா கட்சியில் இணைய வுள்ளதாக அண்மையில் தகவல் கள் வெளியாகின. சில பத்திரிகை களும் இந்த செய்தியை பிர சுரித்தன.

இந்த சூழலில், தான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை என ஊர்மிளா தனது ட்விட்டர் பக் கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஊகத்தின் அடிப் படையிலான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

- பிடிஐ

SCROLL FOR NEXT