அகமதாபாத்
பிரதமர் மோடி தனது பிறந்த நாளான இன்று முழுக்கொள்ளளவை எட்டியுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பார்வையிட்டார்.
பிரதமர் மோடிக்கு இன்று 69-வது பிறந்தநாள். தனது பிறந்தநாளான இன்று குஜராத்தில்தான் முழுமையாக பிரதமர் மோடி செலவிடுகிறார்.
பிறந்தநாளையொட்டி குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். சர்தார் சரோவர் அணை தனது முழுக் கொள்ளவை எட்டியுள்ளதால் அதையொட்டி நடைபெற்ற பூஜைகளிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
முன்னதாக கேவாதியா பகுதியில் உள்ள ஈகோ சுற்றுலாப் பகுதியை பார்வையிட்டார். அவருடன் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.