இந்தியா

பிறந்த நாளன்று பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்ட மோடி

செய்திப்பிரிவு

பிரதமர் மோடி பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டு தனது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

பிரதமர் மோடி இன்று தனது 69வது பிறந்த நாளை இன்று (செவ்வாய்க்கிழமை) சொந்த மாநிலமான குஜராத்தில் கொண்டாடி வருகிறார். .

இதனைத் தொடர்ந்து குஜராத்தில் காலை கேவாடியாவில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் பையில் அடைக்கப்பட்ட பல வண்ண பட்டாம் பூச்சிகளை சுதந்திரமாக பறக்கவிட்டு மகிழ்ந்தார் பிரதமர் மோடி.

இதனைத் தொடர்ந்து நர்மதா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்

தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் மோடிக்கு இன்று 69-வது பிறந்தநாளையொட்டி மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா, திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT