இந்தியா

காஷ்மீர் பாதுகாப்பு குறித்து அமித் ஷா ஆய்வு: பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆளுநர் சத்யபால் மாலிக் சந்திப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி

இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுமார் 230 தீவிரவாதிகள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆய்வு செய்தார்.

டெல்லியில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், கேபினட் செயலா ளர் ராஜீவ் கவுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறிப்பாக சர்வதேச எல்லை மற்றும் கட்டுப் பாட்டு எல்லைக்கோடு பகுதி நிலவரம் குறித்து அமித்ஷாவிடம் விளக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரில் சுமார் 230 தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பாது காப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் ராணுவ அதிகாரி கே.ஜே.எஸ். தில்லான் அண்மையில் கூறும் போது, "பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 230 தீவிரவாதிகள் ஆக்கிர மிப்பு காஷ்மீரில் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் ராணுவ நிலைகளுக்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு நாளும் எல்லையில் தாக்குதலும் ஊடுருவல் முயற்சியும் நடைபெறு கிறது” என்றார்.

இதனிடையே ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீர் பாது காப்பு நிலவரம் குறித்து பிரதமரிடம் அவர் விளக்கியதாக தெரிகிறது.

இயல்புநிலை பாதிப்பு

இதற்கிடையே ஜம்மு காஷ்மீருக் கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய் யப்பட்ட பிறகு காஷ்மீர் பள்ளத் தாக்கில் நேற்று 43-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளில் சாதாரணை தொலைபேசிகள் இயங்குகின்றன. குப்வாரா, ஹண்டுவாரா காவல் மாவட்டங்களில் மட்டுமே மொபைல் போன் சேவை வழங்கப்பட்டது. என்றாலும் இணைய தள சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

எல்லையில் பாக். தாக்குதல்

இதனிடையே ஜம்மு காஷ்மீரின் மெந்தார் செக்டார், பாலகோட் பகுதி யில் பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் இரவு அத்துமீறி தாக்கு தல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்த னர். பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ வீரர்கள் இருவர் காய மடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்களின் உடல் நிலை சீராக உள்ளது.

SCROLL FOR NEXT