நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் பங்கேற்க காங்கிரஸ் மறுத்துவிட்டதால் கடைசி நேரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது: நாடாளு மன்ற முடக்கம் பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்வு காண முடியாது. முதல் வர்கள் சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் பதவி விலகினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். காங்கிரஸ் மட்டுமன்றி சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.