இந்தியா

வாக்காளர் பெயர் நீக்கம்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பிடிஐ

வாக்காளர் பட்டியலில் இருந்து காரணமின்றி பெயரை நீக்கியதால், சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கும்படி தலைமை தேர்தல் அதிகாரிக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. .

இதுதொடர்பான வழக் கொன்றில், மத்திய தகவல் ஆணை யம் மேற்கண்டவாறு உத்தரவிட் டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சுமித் என்வரின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. அவர் ஒருபோதும் தனது வசிப்பிடத்தை மாற்றவே இல்லை. பெயர் நீக்கம் குறித்து அவருக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால், அவர் கடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை.

தனது பெயர் நீக்கப்பட்டதற் கான காரணம் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். ஆனால், அதற்கு பதிளிக்கப்படவில்லை. இதையடுத்து செய்யப்பட் மேல்முறையீட்டின்போது, டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் உள்ள மத்திய பொது தகவல் அதிகாரிக்கு மத்திய தலைமைத் தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தராமைக் காக ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி இருந்தது. இவ்வழக்கில், மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு அளிக்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

“வாக்களிக்கும் உரிமை உள்ள எந்தவொரு வாக்காளரின் பெயரையும், அவருக்குத் தெரியா மல் அதிகாரி நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்கப்பட்டதால் அவர் வாக்களிக்க முடியாவிடில், அவ ருக்கு உரிய இழப்பீடு அளிக்கப் பட வேண்டும். உரிய காலத்துக் குள் அவரின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும்” என தக வல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT