இந்தியா

பாலியல் துன்புறுத்தல் புகார்: சின்மயானந்த் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை

செய்திப்பிரிவு

ஷாஜகான்பூர்

உத்தரபிரதேச மாநிலம் முமுக்சு பகுதியைச் சேர்ந்தவர் சுவாமி சின்மயானந்த். இவர் இங்கு ஆசிர மம், சட்டக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சின்மயானந்த் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன் புறுத்தியதாக, சின்மயானந்தின் ஆசிரம அறக்கட்டளை சார்பில் இயங்கி வந்த சட்டக் கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர், சமூக வலைதளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டார். புகாரின் அடிப்படை யில் ஷாஜகான்பூர் காவல் துறையி னர் கடந்த மாதம் 27-ம் தேதி, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) மூலம் விசாரணை நடத்த உத்தர விட்டது.

இதைத் தொடர்ந்து சுவாமி சின்மயானந்த வீட்டில் அவரிடம் சில தினங்களுக்கு முன்பு எஸ்ஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இதனிடையே கல்லூரியில் தான் தங்கியிருந்த விடுதி அறையி லிருந்து சின்மயானந்தாவின் ஆட் கள் சில தடயங்களை அழித்ததாக எஸ்ஐடி அதிகாரிகளுக்கு சம்பந்தப் பட்ட பெண் புகார் கடிதம் அளித் திருந்தார்.

இந்நிலையில் நேற்று சுவாமி சின்மயானந்த் தொடர்பான 43 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை எஸ்ஐடி குழுவினரிடம் சம்பந்தப்பட்ட பெண் கொடுத்துள் ளார். அப்போது அந்த பெண்ணின் தாயாரிடம் எஸ்ஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் நண்பர்களிடம் எஸ்ஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் 3 ஆண் நண்பர்களிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT