“பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால், இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் மீண்டும் பாராட்டி உள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.யும் வெளி யுறவுத் துறை முன்னாள் இணை அமைச்சருமான சசி தரூர், மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து அவ்வப்போது பாராட்டி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக் குள் தருமசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. மோடியின் யோகா பிரச்சாரம் உட்பட பல விஷயங் களை ஏற்கெனவே சசி தரூர் பாராட் டினார். மோடியின் அழைப்பை ஏற்று, ‘தூய்மை இந்தியா’ இயக்கத்திலும் சசிதரூர் தன்னை இணைத்து கொண்டார்.
இந்நிலையில், மோடி இந்தியாவில் தங்குவதே இல்லை. வெளிநாடுகளிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று காங்கிர ஸார் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இதற்கு முரணாக, “மோடி யின் வெளிநாட்டு பயணங்களால், சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது” என்று சசிதரூர் கூறியுள்ளார்.
பிரபல கல்வியாளரும் வெளி யுறவுக் கொள்கைகள் ஆய்வாளரு மான சி.ராஜாமோகன் எழுதிய, ‘மோடியின் உலகம்: இந்தியாவின் செல்வாக்கை விரிவுபடுத்துதல்’ என்ற நூல் டெல்லியில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிதரூர் பேசியதாவது:
பிரதமர் மோடி கடந்த ஓராண்டில் 24 நாடுகளுக்கு பயணம் மேற் கொண்டுள்ளார். ஒவ்வொரு முறை வெளிநாடு சென்று திரும்பும் போதும், அங்கு இந்தியா பற்றிய மதிப்பை, சாதகமான எண்ணத்தையே ஏற்படுத்தி விட்டு வருகிறார். எந்த நாட்டுக்கு மோடி சென்றாலும், இந்தியாவுக்கு சரி யானதையே செய்துவிட்டு வரு கிறார். இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், தூதரக ரீதியிலான சில விஷயங்களில் பாஜக.வில் இருந்து வேறுபட்டு மோடி முடிவெடுக்கிறார். இவ்வாறு சசிதரூர் பாராட்டு தெரிவித்தார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பல மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு மசோதா வுக்கு எதிராக மக்களை திரட்டி வருகிறார். இந்நிலையில் மோடியை சசிதரூர் புகழ்ந்துள்ளது, காங்கிரஸாருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.