சென்னை
திருச்செங்கோடு தொகுதி அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலு. 4 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார். அவரது மனைவி ரத்தினம் (63). இவர் சென்னை சாஸ்திரி நகர், 6-வது அவென்யூவில் தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு சுதா என்ற மகளும், பிரவீன் (35) என்ற மகனும் உள்ளனர்.
சுதாவுக்கு திருமணமாகி திருப்பூரில் வசித்து வருகிறார். பிரவீன் வெளிநாட்டில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி ரத்தினம் சென்னையில் உள்ள வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த இவரது மகன் பிரவீனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சொத்து பிரச்சினையில் கொலை நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரவீனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கொருக்குப்பேட்டை பிரபாகரன் (23), புளியந்
தோப்பு வேல் அழகி (57), அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சலி (60) ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.