இந்தியா

செப்.17-ம் தேதியை ‘விடுதலை’ நாளாக கொண்டாட மாநில அரசை வலியுறுத்த வேண்டும்: ஆளுநர் தமிழிசைக்கு தெலங்கானா பாஜக கோரிக்கை

செய்திப்பிரிவு

செப்டம்பர் 17, 1948 அன்று மாநிலமாக இருந்த ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைந்த தினத்தை விடுதலை நாளாக மாநில அரசு கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்துமாறு தெலங்கானா பாஜக, மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஆளுநர் தமிழிசைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் தெலங்கானா பாஜக தலைவர் கே.லஷ்மண் தலைமை குழு, இணைந்த தினத்தை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாட வேண்டும் என்று 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

“மூத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி நிஜாம் கல்லூரி மைதானத்தில் ஹைதராபாத்தில் 1999-ம் ஆண்டு கூட்டம் ஒன்றில் பேசும்போது செப்17ம் தேதியை ஆண்டுதோறும் தெலங்கானா விடுதலை நாள் என்று கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்” என்று தங்கள் தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக அரசுகள் தங்கள் மாநிலங்களில் நிஜாம் ஆட்சியில் இருந்த மாவட்டட்ங்களில் செப்டம்பர் 17ம் தேதியை ‘விடுதலை நாள்’ எனக் கொண்டாடுகின்றனர்.

இதனையடுத்து செப்டம்பர் 17ம் தேதிய தெலங்கானா விடுதலை தினமாக மகாராஷ்டிரா, கர்நாடகா போல் கொண்டாட ஆளுநர் தெலங்கானா அரசுக்கு அறிவுறுத்துமாறு தெலங்கானா பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

நிஜாமின் ‘கொடுங்கோல்’ ஆட்சிக்கு எதிராக சண்டையிட்டு தியாகிகள் ஆனவர்களுக்காக நினைவு மண்டபம் அமைக்கவும் ஆளுநர் தமிழிசையிடம் பாஜக கோரிக்கை வைத்துள்ளது.

SCROLL FOR NEXT