ஆந்திர மாநிலம் சித்தூரில் தீப்பிடித்த காரை பார்வையிடும் போலீஸார். 
இந்தியா

ஆந்திர மாநிலம் சித்தூரில் கார் தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவரது தங்கை கலா, பெங்களூருவில் வசித்து வந்தார். சுப நிகழ்ச்சி ஒன்றுக்காக, கலா தனது மகன் பானு தேஜாவுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திருப்பதிக்கு வந்திருந்தார்.

இந்நிலையில், தங்கை கலாவையும், அவரது மகன் பானு தேஜாவையும் பெங்களூருவில் விடுவதற்காக விஷ்ணு நேற்று காலை காரில் புறப்பட்டார். அவர்களுடன் விஷ்ணுவின் மனைவி ஜாஹ்னவி, மகன் பவன் ராம், மகள் சாய் அஷ்விதா ஆகியோரும் சென்றனர். சித்தூர் மாவட்டம் பலமநேர் அருகே உள்ள மாமடுகு எனும் இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விஷ்ணு தவிர காரில் இருந்த மற்ற 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

SCROLL FOR NEXT