மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. இதைப் பின்பற்றி மற்ற நாடுகளும் ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மரண தண்டனை ரத்து செய்வது தொடர்பான வரைவு அறிக்கை ஒன்றை மத்திய சட்ட ஆணையம் தயாரித்து, அதன் மீது பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டு வருகிறது. நீதிமன்றத்தின் பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த கருத்துகள் மூலம் விடை கிடைக்கும் என்று சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுவரை கருத்து தெரிவித் துள்ள 400-க்கும் மேற்பட்டோரில் பெரும்பாலானவர்கள் இப்போது நடைமுறையில் உள்ள மரண தண்டனை முறை தொடர வேண்டும் என கூறியுள்ளனர். இந்த அறிக்கை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மரண தண்டனையை ரத்து செய்யலாம் என்று கூறிய சிலரில் அப்துல் கலாமும் ஒருவர் ஆவார். அவர் கூறியதாவது:
நான் குடியரசுத்தலைவராக இருந்தபோது, பல்வேறு சவாலான பணிகளை எதிர்கொண்டிருக்கிறேன். அதில் முக்கியமானது, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் கருணை மனு மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரம். குற்றச் செயலில் நேரடி தொடர்பு இல்லாத, சிறிதளவே தொடர்புடையவர்களையும் தண்டிக்கிறோமே என்ற உணர்வு தோன்றியது.
ஆனாலும், லிப்ட் ஆபரேட்டர் தனஞ்செய் சட்டர்ஜி என்பவர் 18 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்தது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமானது.
எனவே, அவரது கருணை மனுவை உடனடியாக நிராகரித் தேன். எனவே, மரண தண்ட னையை ரத்து செய்யலாம் என்பது என்னுடைய கருத்து.