இந்தியா

முசாபர்பூர் பலாத்கார வழக்கில் குடும்பத்தினருடன் செல்ல 8 சிறுமிகளுக்கு நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி

முசாபர்பூர் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 சிறுமிகள், தங்கள் குடும்பத்தினருடன் செல்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பிஹார் மாநிலம் முசாபர்பூரில் ஆதரவற்றோர் காப்பகம் ஒன்று இயங்கி வந்தது. அரசு உதவியுடன் செயல்பட்டு வந்த இந்தக் காப் பகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு டாடா சமூகவியல் நிறுவனம் சார் பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, அந்தக் காப்பகத் தில் இருந்த 40-க்கு மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரத்துக்கு உட் படுத்தப்பட்டுள்ளதை கண்டறிந்த அக்குழுவினர், அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

இதையடுத்து, இதுதொடர்பாக பிஹார் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அந்தக் காப்பகத்தின் உரிமையாளரான பிரஜேஷ் தாக்குர் உட்பட 11 பேரை சிபிஐ கைது செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற் றது. அப்போது, பாதிக்கப்பட்ட 8 சிறுமிகளும் தங்கள் குடும் பத்தினருடன் செல்வதற்கு நீதி மன்றத்தில் அனுமதி கோரினர்.

இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமிகளுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, நிதியுதவி வழங்கி அவர்களின் குடும்பத்தினருடன் அனுப்பி வைக்குமாறு பிஹார் அரசுக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர். - பிடிஐ

SCROLL FOR NEXT