இந்தியா

கர்நாடகா முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் மகளிடம் அமலாக்கத்துறை விசாரணை

செய்திப்பிரிவு

பெங்களூரு / புதுடெல்லி

சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், அவரது மகளிடம் அமலாக்கத்துறை அதி காரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

கர்நாடக முன்னாள் அமைச்ச ரும், காங்கிரஸ் மூத்த தலைவரு மான டி.கே.சிவகுமார் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் கடந்த மாதம் அமலாக்கத்துறை யில் ஆஜரானார். 4 நாட்கள் விசாரணை நடத்திய பின்னர் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

இதை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸாரும், டி.கே.சிவகுமார் ஆதரவாளர்களும்,ஒக்கலிகா சாதி சங்கத்தினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டி.கே.சிவகுமாரை வெள்ளிக் கிழமை (இன்று) வரை காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது மகள் ஐஸ்வர் யாவை நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி னர். இதையடுத்து நேற்று காலை 11 மணியளவில் ஐஸ்வர்யா டெல்லி யில் உள்ள அமலாக்கத்துறை அலு வலகத்தில் நேரில் ஆஜரானார்.

டி.கே.சிவகுமார் கல்வி அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கும் ஐஸ்வர்யா பெயரில் ரூ.108 கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக தெரிகிறது. அவரிடம் டி.கே.சிவகுமார் மீதான சட்ட விரோத பண பரிவர்த்தனை, தொழில் ரீதியான வருமானங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முதல் நாளான நேற்று அவரிடம் 70-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி யும், டி.கே.சிவகுமாரின் தம்பி யுமான டி.கே.சுரேஷ் கூறுகையில், “எங்கள் குடும்பத்தினர் எவ்வித சட்ட விரோத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எங்களிடம் உள்ள அனைத்து சொத்துகளுக்கும் உரிய முறையில் வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக எங்களை பழிவாங்கு வதற்காகவே வருமான வரித் துறை, அமலாக்கத்துறை இத் தகைய நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. இந்த விவ காரத்தை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்'' என்றார்.

டி.கே.சிவகுமாரின் மகளை தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்த சிலரிடமும் அமலாக்கத் துறை விசாரிக்க திட்டமிட்டுள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது.

SCROLL FOR NEXT